பைரவரை இந்த நாட்களில் வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்..!

0

ரம்மாவின் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுத்த அவதாரமே பைரவர் அவதாரம். பிரம்மாவின் தலையை பைரவர் கிள்ளிய ஸ்தலம்தான் திருக்கண்டியூர். சிவன் கோயிலில் தரிசனம் முடிந்ததும் சண்டிகேஸ்வரரை வணங்குவது போல் தவறாமல் பைரவரையும் வணங்க வேண்டும்.

பைரவரை வணங்கினால் சனீஸ்வரரின் பாதிப்பு குறையும். செல்வம் பெருகும். இழந்த பொருள்கள் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பைரவருக்குப் பல வடிவங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சொர்ண பைரவர். இவர் சொர்ண பீடத்தில் அமர்ந்து அழகிய திருமேனியுடன் இடக்கையில் சூலம் ஏந்தி, மடியில் பைரவியை அணைத்தவாறு வலக்கையில் தங்கக் குடமேந்தி காட்சி தருவார்.

நாய் வாகனத்துடன் உள்ள பைரவரை வீடுகளில் வைத்து பூஜை செய்யும் வழக்கம் இல்லை. ஆனால், பிறந்த குழந்தையின் அரைஞாண் கயிற்றில் நாய்க் காசு கட்டும் வழக்கம் உள்ளது. இது குழந்தைகளை பயம், தோஷம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது.

இந்த நாய் உருவம் உள்ள நாய்க் காசு, பைரவரையே குறிக்கிறது. கால பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், சதுர்த்தி திதிகளிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்குவது மிகச் சிறந்தது. இவரை சிவப்பு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சிவப்பு ஆடை சாத்தி, சிவப்புப் பழங்களை நிவேதனம் செய்யலாம். – Source: dinakaran

Leave A Reply

Your email address will not be published.