சற்று முன் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று..!

0

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 41 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிஹாரா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 583 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இன்றைய நாளில் ஆயிரத்து 440 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 23 ஆயிரத்து 668 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.