சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இதை ஒரு முறை படிங்க..!

0

சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் மனதளவிலும், உடலளவிலும் குணமாவதற்கு சில காலம் பிடிக்கும்.இன்றைய பிஸியான வாழ்கை முறையில், குழந்தை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அதிலும், சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில், கிராமப்புறங்களை காட்டிலும், நகர்புறங்களில் குறைந்து வருகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. உடல் உழைப்பில்லாமை, போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. நவீன உணவு பழக்க வழக்கம், வேலையில் பிஸியாக இருப்பது உள்ளிட்டவை முதலானவை. அதனால், இன்றைய நவீன கால கட்டத்தில் பெண்கள் அதிக அளவில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், பிரசவத்திற்கு பிறகு சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அதிக பாதுகாப்புடன் இருத்தல் வேண்டும். அப்போது,தான் நீங்கள் விரைவில் குணமடைய முடியும். எனவே, நீங்கள் சீக்கிரம் குணமடைய பின்பற்ற வேண்டிய சில ஈஸியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொண்டவர்கள். தையல் பிரிந்து விடுமோ என்ற பயத்தில், சில நாட்கள் வரை கட்டிலில் இருந்து எழுந்திருக்கவே மாட்டார்கள். ஆனால், அப்படி இருக்காமல் காலையில் எழுந்து பாத்ரூம் செல்வது போன்ற உங்களுக்கான ஈஸியான வேலைகளை நீங்களே செய்து கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறந்த சில நாட்கள் வரை உதிரப் போக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக உதிரப் போக்கு குறைந்து நின்று விடும்.ஆனால் ஓய்வு இல்லாமல் கடினமாக ஏதேனும் வேலை செய்தால் உதிரப் போக்கு அதிகரிக்கும். அதனால், நீக்கும் வரை உடலுக்கு போதிய ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, வயிற்றின் அடிப்பகுதியில் சிசேரியன் செய்யப்பட்ட இடத்தில் மருத்துவர்கள் தையல் போட்டிருப்பார்கள். சிலர், வீட்டிற்கு வந்ததும் அந்த புண் ஆறுவதற்குள், தையலை பிரித்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்யாமல், அந்த புண் ஆறுகிற வரையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில், குளிர்ந்த தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிசேரியனுக்குப் பிறகு, நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது புண்களை விரைவில் குணமாக்கும். குறிப்பாக மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் மனதளவிலும், உடலளவிலும் குணமாவதற்கு சில காலம் பிடிக்கும். எனவே, புண்கள் மற்றும் பிறப்புறுப்புப் பாதை ரணங்கள் முழுமையாக சரியாகும் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் உடலில் காய்ச்சல், உடல் வலி அதிகரித்து காணப்பட்டால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.-News & image Credit: maalaimalar

Leave A Reply

Your email address will not be published.