யாழ் மண்டதீவில் உடல்நலம் மற்றும் இயற்கை அழகு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிலையம்..!!

செய்திகள்
Advertisement

சர்வதேச மூலிகை மற்றும் மரங்கள் பாதுகாப்பகம்(IHTC) சார்பாக யாழ்ப்பாண மண்டதீவில் உடல்நலம் மற்றும் இயற்கை அழகு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிலையமானது 14.01.2021 அன்று Vesta Industry
நிறுவனர் திரு. சுந்தரலிங்கம் வாகீசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து IHTC நிறுவனர் Dr .திரு.கோபாலகிருஸ்ணன் லவன் அவர் கருத்துத் தெரிவிக்கையில் எங்கள் தொண்டுசார் அமைப்பானது மக்களிடம் மூலிகை மற்றும் இயற்கையான உணவு முறைகள் குறித்து

போதுமானளவு விழிப்புணர்வு ஏற்படுத்து வதிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது அந்தவகையில் Agastyaa organic cosmetic and helth care நிறுவனம் ஸ்தாபிக்கபட்டு

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட (100% organic) அழகு சாதனம் மற்றும் உடல்நலம் மிக்க உற்பத்தி பொருட்களை பக்கவிளைவுகள் அற்ற முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாரிய பங்காற்றும் என்பதை பெருமையுடன் தெரிவிப்பதோடு இந் நிறுவனமானது international herbs and trees conservative organization அமைப்பினது வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement