தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களுக்கு ஹிருணிகா பதிலடி!

0

நேற்றையதினம் பிரதமர் வாசஸ்தலத்தின் முன்பாக ஹிருணிக்கா பிறேமச்சந்திர உள்ளிடவர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்காவில் புகைப்படங்களை சிலர் மோசமான வர்த்தித்து பதிவேற்றியிருந்தனர்.

இந்நிலையில் தன் புகைப்படத்தை பதிவேற்றி தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களுக்கு ஹிருணிகா பதிலடிகொடுத்துள்ளார். சம்பவம் குறித்து ஹிருணிகா கூறியுள்ளதாவது,

எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன், ஏனெனில் அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!” என ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.