அடுத்தவாரம் பாடசாலைகளை நடத்துவத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் சூழவுள்ள நகரங்களில் உள்ள பாடசாலைகள், ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பவற்றின் நடவடிக்கைகளை அடுத்த வாரம் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.