வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அதிகமா செலவாகுதா? இதை மட்டும் செய்து பாருங்கள்.!

0

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், உங்கள் வீட்டில் பணம் நிலைத்திருப்பதில்லையா? எவ்வளவு வேகமாக பணம் கைக்கு வருகிறதோ, அதே வேகத்தில் கையில் இருந்து பணம் கரைகிறதா? நாம் கஷ்டப்பட்டு எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென

சம்பாதிக்கும் பணம் கையில் நிலைக்காமல் இருந்தால், அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால் ஜோதிடத்தில், இந்த மாதிரியான பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஒருசில பரிகாரங்கள் உள்ளன. அதை சரியாக செய்து வருவதன் மூலம் பணம் கையில் நிலைத்திருப்பதைக் காணலாம்.

நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தும், வெற்றி கிடைக்கவில்லை அல்லது வீட்டில் பணம் நிலைப்பதில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தீர்வு கிடைக்கும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

லட்சுமி மந்திரம்உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டுமா? ஜோதிடத்தின் படி, பௌர்ணமி அன்று காலையில் எழுந்ததும், நீராடிய பின்னர் அரச மர இலைகளை எரித்து, ஜப மாலை பயன்படுத்தி லட்சுமி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதனால் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு பெருகி, வீட்டில் பணம் தங்க ஆரம்பித்து, பண பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சியும், அமைதியும் வீட்டில் பெருகும்.

மாவு டப்பாவில் துளசிஉங்கள் வீட்டில் உள்ள மாவு டப்பாவில் 5 துளசி இலைகள் மற்றும் 2 குங்குமப்பூ விதைகளை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த மாவானது சனிக்கிழமைகளில் அரைத்துவிட வேண்டும். முக்கியமாக அந்த மாவில் கடவை பருப்பும் கலந்து அரைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, வீட்டில் பணமும் நிலைத்திருக்கும்.

41 நாள் பரிகாரம்பௌர்ணமி நாளன்று ரூபாய் தாளை எடுத்து, அதில் சிவப்பு கயிற்றினை கட்டி, அதை ராதா-கிருஷ்ணன் படம் அல்லது சிலைக்கு பின் மறைத்து வைக்க வேண்டும். பின் உங்கள் விருப்பத்தை இறைவனிடம் கூற வேண்டும்.

இப்படி தொடர்ந்து 41 நாட்கள், ரூபாய் தாளை எடுத்து வைத்து விருப்பங்களை கூறுங்கள். இதில் ஒரு நாள் கூட தவறு ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், கடவுள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார். அதோடு வீட்டில் பணமும் நிலைத்திருக்கும்.

சிறு அரிசி மூட்டைகாலையில் எழுந்ததும் ஒரு சுப வேளையில், சிவப்பு நிற பட்டுத்துணியை எடுத்து, அதில் 21 உடையாத அரிசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் லட்சுமி தேவியை மனதார வணங்கி,

அந்த அரிசி மூட்டையைக் கட்ட வேண்டும். லட்சுமி தேவியை வணங்கிய பின்னர், உங்கள் அம்மாவிடம் உங்களின் விருப்பத்தைக் கேட்டு, அந்த அரிசி மூட்டையை உங்கள் ஹேண்ட்பேக் அல்லது பணப் பையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் பணப் பிரச்சனைகள் தீரும்.

காளி தேவியை வணங்கவும்ஜோதிடத்தின் படி, தினமும் வீட்டில் காளி தேவியை வழிபட வேண்டும். மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளி கோவிலுக்கு சென்று தூபம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்ட பின்னர் பிரசாதத்தை வழங்க வேண்டும்.

அதோடு காளி தேவிக்குரிய மந்திரத்தைக் கூறி, உங்கள் விருப்பங்களை அவளிடம் கேளுங்கள். இப்படி செய்வதன் மூலம், உங்களைச் சுற்றி அல்லது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் நுழையும்.

Leave A Reply

Your email address will not be published.