மறந்தும் இந்த பொருட்களை கட்டிலுக்கு கீழே வெச்சுடாதீங்க… இல்லன்னா கஷ்டப்படுவீங்க..!

0

உலகில் உள்ள ஒவ்வொரு விஷயமும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையது. அதுவும் நாம் வாழும் வீட்டின் சமையலறை முதல் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் வரை, ஒவ்வொன்றும் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே தான் நாம் குடியிருக்கும் வீடு சரியான வாஸ்துப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். வாஸ்து குறைபாட்டுடன் வீடு இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது வீட்டில் படுக்கை மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமான ஒன்றும் கூட. வாஸ்துப்படி ஒருவர் தங்களின் படுக்கையை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதேப் போல் படுக்கையின் கீழ் ஒருசில பொருட்களை எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக்கூடாது. ஒருவேளை வைத்திருந்தால், அது வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இப்போது படுக்கையின் கீழ் இருக்கக்கூடாத சில பொருட்களைக் காண்போம்.

இரும்பால் ஆன பொருட்கள்பலர் படுக்கைக்கு அடியில் ஒரு இரும்பு பொருளை வைத்திருப்போம். ஆனால் அவ்வாறு வைத்திருப்பது வாழ்வில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கைக்கு அடியில் நீங்கள் பயன்படுத்தாத பொருட்களை அல்லது குப்பை பொருட்களை வைக்கக்கூடாது.

ஒருவேளை பிற்காலத்தில் நீங்கள் பயன்படுத்து பொருட்களாக இருந்தாலும், அவற்றை படுக்கைக்கு அடியில் வைக்காமல், வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் குடும்பத்தில் எப்போதும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கண்ணாடிவாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை தலைக்கு பின்புறத்திலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ வைக்கக்கூடாது. ஒரு வேளை வைத்தால், திருமணமான தம்பதிகளிடையே சண்டையை ஏற்படுத்தி, உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.

துடைப்பம்எக்காரணம் கொண்டும் கட்டிலுக்கு அடியில் துடைப்பத்தை வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையை வரவழைக்கும். மேலும் படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை வைப்பதால் பல பிரச்சனையை சந்திக்கக்கூடும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம், நிதி நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

காலணிகள்வாஸ்துப்படி, படுக்கைக்கு அருகில் அல்லது தலைக்கு அருகில் காலணிகளை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. இல்லாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

மின்சார பொருட்கள்பயன்படுத்தாத மின்சார பொருட்கள் படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். அதோடு தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே எந்த ஒரு மின்சார பொருட்களையும் படுக்கைக்கு அடியில் மட்டுமின்றி, படுக்கை அறையில் எங்கும் வைத்திருக்காதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.