உங்க சுண்டுவிரலுக்கு கீழ இந்த கோடு இருந்தா உங்க எதிர்காலம் வெளிநாட்டில்தான் தெரிஞ்சிக்கோங்க..!

0

வெளிநாட்டு மோகம் என்பது இப்பொழுது கிட்டதட்ட அனைவருக்கும் இருக்கும் ஒன்றாகும். வெளிநாடுகளில் இருக்கும் வசதிகளுக்காகவும், வாழ்க்கை முறைக்காகவும் அங்கு சென்று வாழ விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த கால இளைஞர்களின் இலட்சியமாகவே வெளிநாட்டு வாழ்க்கை மாறிவிட்டது. அதற்கான முயற்சியில் ஈடுபடாத இளைஞர்கள் மிகவும் குறைவுதான்.

நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நமது விதியானது பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டதாகும். அதன்படிதான் நாம் வெளிநாடு செல்வோமோ அல்லது அங்கேயே செட்டில் ஆவோமா என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. நமது விதி நமது கையில்தான் இருக்கிறது கைரேகையாக. நீங்கள் வெளிநாடு செல்வீர்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ஜோதிடர்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் கைகளை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

சந்திர மேடுநீங்கள் வெளிநாடு செல்வீர்களா? மாட்டிர்களா? இதற்கான விடை உங்கள் கையில்தான் ஒளிந்துள்ளது. சந்திர மேடானது உங்கள் சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் பெரிய பகுதியாகும், இது இதய கோட்டிற்கு கீழ் வருகிறது. இந்த மேடுதான் நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா என்பதை தீர்மானிப்பதாகும்.

உங்களின் ஆசைகள்இந்த சந்திர மேடு உங்களுடைய சிந்திக்கும் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வு போன்றவற்றையும் பிரதிபலிக்கிறது. சாஸ்திரங்களின் படி இந்த மேடு நன்றாக இருந்தால் உங்களின் ஆசைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்.

வெளிநாடு செல்வதுநீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இந்த மேட்டை நன்கு கவனியுங்கள். உங்களின் ஆயுள்ரேகையிலிருந்து ஒரு கோடு சந்திர மேட்டை நோக்கி சென்றால் நீங்கள் வெளிநாட்டில் செட்டில் ஆக வாய்ப்புள்ளது. பல சிறிய கோடுகள் இருந்தால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும் என்று அர்த்தம்.

மகிழ்ச்சியான வாழ்க்கைஇது மட்டுமின்றி, சந்திர மேட்டிலிருந்து குரு மேடு அதாவது உங்கள் சுட்டு விரலுக்கு கீழே ஒரு கோடு சென்றால் உங்களை விட சிறந்த அதிர்ஷ்டசாலிகள் யாருமில்லை. இவர்களின் உழைப்பு இவர்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்.

பிரச்சினைகள்முன்பே கூறியது போல நன்கு வரையறுக்கப்பட்ட சந்திர மேடானது உங்களுடைய வெற்றிகளையும், வெளிநாட்டு வாழ்க்கையையும் குறிக்கும். அதேசமயம் சந்திர மேட்டில் பிளவுகள் ஏற்பட்டிருந்தால் உங்களுடைய வாழ்க்கை பல பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் விரும்புவதை பெற பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களின் வெளிநாட்டு வாழ்க்கை சந்திர மேட்டில் இருக்கும் கோடுகளை பொறுத்ததாகும்.

சந்திர மேடு கூறும் தகவல்கள்சந்திர மேடு உங்களின் வெளிநாட்டு வாழ்க்கை மட்டுமின்றி உங்கள் வாழ்க்கையில் பல நிகழ்வுகளை முடிவு செய்வதாக உள்ளது. நிலா என்பது காதல் மற்றும் மென்மையின் அடையாளமாக இருக்கிறது. அதன்படி சந்திரமேடு பலாமாக உள்ளவர்கள் அதிக காதல் உணர்வு உள்ளவர்களாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

கனவுகள்சந்திர மேடு பலமாக உள்ளவர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வார்கள், ஆனால் அவர்கள் பெரும்பாலும் சோம்பேறியாக இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்கள் கனவுலகத்திலேயே வாழ்வார்கள் வெளியுலகை பற்றிய கவலையோ, அச்சமோ அவர்களுக்கு இருக்காது.

தனிஉலகம்இவர்கள் கவிஞர்களாகவோ அல்லது கலைஞர்களாகவோ இருப்பார்கள். அதனால் இவர்கள் நிஜ உலகிலிருந்து எப்பொழுதும் தூரத்திலேயே இருப்பார்கள். இவர்களின் உலகம் பற்றிய பார்வையானது எப்போதும் வித்தியாசமானதாக இருக்கும்.

அனைத்தும் அன்பேஇவர்கள் பெரும்பாலும் இதயத்தால் ஆளப்படுபவர்கள், அதனால் அடிக்கடி காதலில் விழுவார்கள். அவர்களின் இதயம் எப்போதும் உணர்ச்சிவசப்பட தயாராய் இருக்கும். இதனால் இவர்கள் அதிகம் காயப்பட நேரிடலாம். வெளிஉலகத்தின் வஞ்சமும், தீமையும் இவர்களுக்கு தெரியாது, அதனால் இவர்கள் ஏமாறும் வாய்ப்புகள் அதிகம்.

வெளியே சாய்ந்திருந்தால்ஒருவேளை சந்திர மேடு படர்ந்து காணப்பட்டால் அவர்கள் உடல் அளவில் அதிக சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். அவர்கள் எப்பொழுதும் பாலியல் உறவை பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்கள். ஒருவேளை சந்திர மேடு சுக்கிர மேட்டை நோக்கி சென்றால் அவர்கள் வாழ்க்கையில் பல தவறுகளை செய்வார்கள் அதனால் பல அவமானங்களை சந்திக்க நேரிடும்.

வெளிநாடு வாழ்க்கைசந்திர மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால் அவர்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்ல வாய்ப்புள்ளது. அதுவே ஒரேயொரு தீர்க்கமான கோடு காணப்பட்டால் அவர்கள் வெளிநாட்டிலேயே செட்டில் ஆக வாய்ப்புள்ளது. இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கடின முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒருவேளை உங்கள் கையில் இந்த மேடு இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை பல போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.