இதைவிட கணவருக்கு பெரிய சர்பிரைஸ் வேறென்ன இருக்கு..! இப்படிகூட பொண்ணுங்க பண்ணலாமே..!

0

நம் வாழ்வில் சிறு சிறு சந்தோஷங்கள் பல உள்ளன, அதை எப்படி கவனித்து அனுபவிக்கிறோம் என்பதே முக்கியம். நீங்கள் முதல் முறையாக தாய்மை அடையும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. பிரக்னென்சி கிட் சோதனையில் “ஆம்” என்று பதில் வந்து விட்டால் போதும் சந்தோசத்தில் மனது தானாகவே வானில் பறக்க ஆரம்பித்து விடும்.

அதுமட்டுமல்ல அதை உங்கள் கணவரிடம் தெரிவிக்கும் தருணம் அவருக்கு இன்ப அதிர்ச்சி மற்றும் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் கணவரிடம் எப்படி வித்தியாசமாக உணர்த்தலாம் என யோசித்து கொண்டிருக்கீறீர்களா, யோசியுங்கள் தவறில்லை நாங்களும் சில யோசனைகளை வழங்குகின்றோம் படித்து உங்கள் கணவரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.

செல்ல பிராணி:உங்களின் செல்ல பிராணியின் கழுத்தில் “நீங்கள் அப்பா ஆக போகிறீர்கள்” அல்லது “நான் கர்ப்பமாக உள்ளேன்” எனப்து போன்ற வாசகங்களை சிறு பேப்பரில் எழுதி கட்டி விடுங்கள். கண்டிப்பாக உங்கள் கணவர் வீட்டிற்குள் வந்தவுடன் செல்ல பிராணியை கொஞ்சுவார். அப்பொழுது அவரது கண்ணில் படும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை உங்கள் கண்ணார கண்டு களியுங்கள்.

இனிப்பு:இம்முறை பல திரைப்படங்களில் வந்து விட்டது அதாவது கணவர் வீட்டுக்கு வந்தவுடன் சர்க்கரையை அவர் வகையில் கொடுத்து நீங்க அப்பா ஆக போறீங்க என சொல்லுவார்கள். இதுவும் அதே முறைதான் சற்று வித்தியாசம், என்ன என்று கேட்டல் அவருக்கு மிகவும் பிடித்த இனிப்பு பாதார்தத்தை செய்து அதில் “உங்கள் கரு என் வயிற்றில் உள்ளது” என எழுதி ஓவன் அல்லது குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டு அவரை எடுக்க சொல்லலாம். செய்தியை படித்தவுடன் அவரின் அன்பு மழையை பொழிந்து விடுவார் சந்தேகமில்லை.

வார்த்தை விளையாட்டு:உங்கள் கணவரிடம் சிறு குறிப்புகள் கொடுத்து அவரை கண்டு பிடிக்க சொல்லலாம், அவரின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை ரசிக்கலாம்.சர்ப்ரைஸ் ஸ்வீட்:உங்களின் வழக்கமான உணவுக்கு பிறகு இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு உங்கள் வயிற்றில் அம்பு போன்று வரைந்து காட்டி விட்டு ஒரு கிண்ணத்தில் குழந்தை வடிவ இனிப்புகளை கொடுங்கள். உங்கள் கணவருக்கு எளிதில் புரிந்து விடும் மகிழ்ச்சியில் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்.

பார்க்கிங் லாட்: ஒரு சில மால்கள் மற்றும் உணவகங்களில் தாய்மை அடைந்தவர்களுக்கென சிறப்பு பார்க்கிங் லாட்கள் இருக்கும். அங்கு உங்கள் கணவரை காரில் அழைத்து சென்று உங்கள் காரை அங்கு பார்க் செய்யுங்கள். உங்களை கணவர் ஒரு வேளை கண்டுபிடித்து விட்டால் மகிழ்ச்சி கடலில் திளைப்பார்.

பரிசு பொருள் வாங்குதல்:“நான் என் அப்பாவை நேசிக்கிறேன்” போன்ற வாசகங்கள் கொண்ட கைக்குட்டை அல்லது சட்டை வாங்கி பரிசளிக்கலாம், உங்களின் கணவர் எளிதில் புரிந்து கொள்ளுவார், பின்பு கொண்டாட்டம் தான்.

வாசகங்கள்:உங்கள் கணவரின் அறை அல்லது கணினி மேஜையில் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு, அங்கே உங்கள் குழந்தைக்கு இடம் கொடுங்கள் என எழுதி வையுங்கள். பார்த்தவுடன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று விடுவார்.

ஓவியங்கள்:நீங்கள் ஒரு சிறந்த ஓவியர் என்றால் இன்னும் சிறப்பு, நீங்கள் மற்றும் கணவருடன் சிறு குழந்தை படத்தையும் வரைந்து பரிசளியுங்கள் அல்லது அவர் கண்ணில் படும்படி மாட்டி விடுங்கள். இது போதும் சந்தோசத்தில் உங்களை தலைக்கு மேல தூக்கி விடுவார்.

விளையாட்டு பொருட்கள்:உங்களின் கணவர் ஒரு ஸ்போர்ட்ஸ் பைத்தியம் என்றால், அவருக்கு பிடித்த விளையாட்டின் குழந்தை உபகரணங்களை (ஜூனியர் வெர்சன்) வாங்கி வீட்டில் வைத்து விடுங்கள், எளிதில் புரிந்து கொள்ளுவார் உங்களை அரவணைத்து அன்பை பொழிவார்.

ஸ்லைடு ஷோ, வீடியோ:உங்களுக்கு ஸ்லைடு ஃப்ரிபரேசன் தெரியும் என்றால் உங்கள் திருமணத்தில் இருந்து எடுத்த புகை படங்களை தொகுத்து ஸ்லைடு தயாரித்து நீங்கள் தாய்மை அடைந்த விஷயத்தை கடைசி ஸ்லைடில் தெரிவிக்கலாம் அல்லது அதே புகை படங்களை வைத்து சிறு வீடியோவாக தயாரித்து உங்கள் கணவரை பார்க்க சொல்லலாம். கண்டிப்பாக இன்ப அதிர்ச்சியை அளிக்கும் சந்தேகமில்லை.

ஸ்பேர் அறையை அலங்கரித்தல்:உங்கள் வீட்டில் சிறிய அல்லது ஸ்பேர் அறை இருந்தால், அதை குழந்தை பொம்மைகள் அல்லது குழந்தைகள் படம் கொண்ட திரைச்சீலைகள் கொண்டு அலங்கரித்து, அதை அவர் கண்களை மூடி அழைத்துச்சென்று காட்டுங்கள். நிச்சயம் அவர் அந்த அறையில் தனது தினசரி நேரத்தை உங்கள் குழந்தையின் நினைப்பில் மகிழ்ச்சியுடன் செலவிடுவார்.

மொபைல் ஃபோன்:உங்கள் மொபைல் ஃபோனில் புதிதாக பிறந்த குழந்தையின் அல்ட்ராசவுண்ட் படம் அல்லது வீடியோவை பதிவிறக்கம் செய்து அவருக்கு அனுப்பலாம் மற்றும் தாய்மை அடைந்த செய்தியை அனுப்பலாம். எப்பேர்பட்ட வேலையில் இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு உறுதி செய்துகொள்ள கண்டிப்பாக உங்களை மொபைலில் அழைத்து விடுவார். அதுமட்டுமல்ல அந்த நாளில் சீக்கிரமே இனிப்புகளுடன் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவார்.

பீடிங் பாட்டில்: அடுத்த முறை அவர் ஜூஸ் அல்லது தண்ணீர் கேட்டால், அதை ஒரு ஃபீடிங் பாட்டிலில் ஊற்றி கொடுங்கள். அவர் உங்களை ஆச்சரியத்துடன் பார்த்து, உங்கள் புன்னகையின் அர்த்தத்தை எளிதில் புரிந்து கொள்வார். பின்பு என்ன மகிழ்ச்சியில் அவரது கைகளில் உங்களை ஏந்துவார்.

டின்னர் முன்பதிவு:உணவகத்தில் ஒரு மேஜையை முன்பதிவு செய்துவிட்டு, அந்த தகவலை இவ்வாறு அனுப்புங்கள், “இரவு உணவுக்காக மேஜையை முன்பதிவு செய்துள்ளேன்,மூன்று பேர், நீங்கள், நான் மற்றும் மூன்றாவது நபர் ஒன்பது மாதங்களில் வந்தடைவார் ” என அனுப்புங்கள். மகிழ்ச்சியில் உங்களை கொண்டாடுவார்.

கண்ணாடியில் எழுதுவது:இதுவும் பழைய முறைதான் இருப்பினும் சிறந்த ஓன்று. உங்கள் லிப்ஸ்டிக் கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியில் “தந்தையே வருக” என எழுதி வையுங்கள். படித்ததும் மகிழ்ச்சியில் ஆடி விடுவார்.source:boldsky
https://youtu.be/C8xwXdGNklk

Leave A Reply

Your email address will not be published.