நீங்கள் வைத்திருக்கும் பணப்பை, பர்ஸ்-ல் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்க… செல்வம் குறையாமல் கொட்டுமாம்!

0

ஆன்மீகத்தில், உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை கொண்டது உப்பு. இதுவே பரமாத்மாவின் தத்துவம் என்கிறது ஆன்மீகம்.உப்பை வைத்துக் கொண்டு, ஏராளமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நல்வாழ்க்கை வாழ்வதற்கு, தீயசக்திகள் அனைத்தும் விலகி ஓடுவதற்கு கல் உப்புப் பிரார்த்தனையைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகின்றனர்.

நமக்குள் இருக்கிற நேர்மறை சிந்தனைகளை மழுங்கடிக்கும் வல்லமை தீயசக்திகளுக்கு உண்டு. இவற்றையெல்லாம் போக்கும் சக்தி உப்புக்கு உண்டு.உப்பை கொண்டு நமக்கு செய்துகொள்ள கூடிய சில நன்மை அளிக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். அடிக்கடி உப்பு நீரில் குளித்து வருவது நல்லது. ஏனெனில், உப்பு நீர் ஆன்டிசெப்டிக், ஆன்டி பாக்டீரியா வாக செயல்படும். நெகடிவ் எனர்ஜியை போக்கி நேர்மறை ஆற்றலை அதிகமாக்கும்.

வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால், வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும்.
உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பணப்பை போன்றவற்றில் சில கல்லுப்பு தூள்களை போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும்.

நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வானங்களை சுத்தப்படுத்துதினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும். எதிர்பாராத விபத்துகள் ஏற்படாமல் காக்கும்.வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்.

Leave A Reply

Your email address will not be published.