தங்கத்தில் தாலி அணிவது சரியா..!! இது தெரிந்தால் இனிமேல் இப்படி பண்ணவே மாட்டிங்க..!!

0

தாலி என்பது இந்துக்களை பொறுத்தவரை மிக மிக புனிதமான ஒன்றாகும். வெவ்வேறு பழக்க வழக்கங்களோடு வாழ்ந்த ஒரு பெண்ணும் ஆணும் மந்திரங்கள் முழங்க அக்கினி சாட்சியாக திருமண பந்தத்தில் இணைகின்றனர். அப்போது பெண் கழுத்தில் மங்களகரமான தாலி கயிறு ஏறுகிறது.

பழங்காலத்தில் தாலிக்கயிறு என்பது மஞ்சள் கயிறாக மட்டுமே இருந்தது ஆனால் தற்போது பலர் தங்கத்தில் தாலி கயிறு செய்து அணிகின்றனர். இது சரியா? பழந்தமிழர்கள் ஏன் மஞ்சள் கயிறில் தாலி அணிந்தனர்? இப்படி பல விடயங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

அந்த காலத்தில் தாலிக்கயிறு என்பது மஞ்சள் கயிறாக தான் இருந்தது. தினமும் குளிக்கையில் பெண்கள் அதற்கு மஞ்சள் தடவுவதை வழக்கமாக வைத்திருந்தனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே பெண்கள் கர்பம் தரிக்கயில் அவர்கள் கழுத்தில் அணிந்துள்ள தாலி கறியின் மஞ்சளானது தாயையும் சேயையும் காக்கும் ஒரு மிக சிறந்த கிருமி நாசினியாக இருந்தது.

தாலிக்கயிறில் உள்ள மஞ்சளானது பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயையும் வரவிடாமல் காக்கும் ஒரு கவசமாக விளங்கியது. ஆனால் இன்று நிலைமை வேறு. பலருக்கும் இன்று மார்பகம் சம்மந்தமான நோய்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் அன்று போல இன்று மஞ்சள் கயிறில் தாலி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு நியதிக்கு பின்பும் ஒரு அறிவியல் இருக்கதான் செய்தது.

சரி, தாலி கயிறை தங்கத்தில் செய்து அணிந்துகொள்வது முறையா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறவேண்டும். தாலி கயிறை தங்கத்தில் அணிய நினைப்போர் அதில் நிச்சயம் மஞ்சள் கயிறு ஒன்றை கோர்த்து அணியலாம். மற்றபடி தாலி சரடு என்பது மஞ்சள் கயிறாக இருப்பதே அனைத்திற்கும் நல்லது.

Leave A Reply

Your email address will not be published.