மற்றவர்களிடம் பேசும் போது இந்த யுக்தியை பயன்படுத்தி பேசித்தான் பாருங்களேன்..!! உங்கள் பேச்சுக்குன்னே தனி மரியாதை கிடைக்குமாம்..!!

0

நம்மால் சிலரிடம் பேசி, காரியத்தை சாதித்துக் கொள்ளவே முடியாது. நம்முடைய பேச்சில் என்னதான் வித்தை இருந்தாலும், அது குறிப்பிட்ட சில பேரிடம் செல்லுபடி ஆகாது. நம்மில் பல பேருக்கு இந்த அனுபவம் இருக்கும். ஏதாவது ஒரு வேலை கட்டாயம் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும். ஆனால்

அந்த வேலையை நமக்கு செய்து தரும், அந்த நபர் நம் சொல்வது சரியாக இருந்தாலும், அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார். நாம் சொல்வது தவறான ஒரு விஷயம் என்றாலும் பரவாயில்லை. ஆனால், நம் பக்கம் தவறு என்று கூறுவதற்கு ஒரு குறை கூட இருக்காது. நம்மை முன்னேற விடாமல் தடுக்க,

விதண்டாவாதம் பேசிக்கொண்டு, நமக்கென்று சில பேர் வந்து தொல்லை கொடுக்க தான் செய்வார்கள். இதன் மூலம் பல பிரச்சினைகளை நாம் சந்தித்திருப்போம். அரசாங்க வேலையில் தாமதம், தொழில் தொடங்க அனுமதி கிடைப்பதில் தாமதம், கட்டிடம் கட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம்,

சிலருக்கு வீடு கட்டுவதற்கு கடன் தொகையை பெற மிகச் சிரமப் படுவார்கள். தங்கள் கையில் சரியான பத்திரங்கள் இருந்தாலும்கூட, வங்கிகளில் நமக்கு கடன் தராமல் புறக்கணிப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வு வேண்டாமா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெரிய பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல,

‘நீங்கள் மற்றவர்களை பார்த்து பேசும் போது, உங்களது காரியங்களை சுலபமாக சாதித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் வார்த்தைகள், கேட்பவர்களது செவிகளில் புகுந்து மனதில் ஆழமாக பதிய வேண்டும்.’ என்றால் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்கள் தேவைகளுக்காக மற்றவர்களை அணுகும் போது, அவர்களின் வலது கண்களை பார்த்தவாறு உங்களது தேவைகளையோ அல்லது கோரிக்கைகளையோ சொல்லவேண்டும். அப்படி அவர்களின் வலது கண்களைப் பார்த்துப் பேசும் போது உங்களது கைகளில் சின்முத்திரை இருக்க வேண்டும்.

இந்த முத்திரையை உங்களது ஒரு கைகளில் வைத்துக் கொண்டால் மட்டும் போதும். இதோடு சேர்த்து உங்களது இரண்டு கால்களின் பெரு விரல்களையும் பூமியில் அழுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் மற்றவர்களிடம் பேசிப் பாருங்கள். உங்களது தேவைகள் அதிவிரைவாக நிறைவேறுவதை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.

உங்களின் வார்த்தைகளை, அடுத்தவர்களின் மனதில் ஆழமாக பதியவைக்கும் யுக்திதான் இது. உங்களின் கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்றாலும் நீங்கள் பேசியதை, அந்த குறிப்பிட்ட நபர் திரும்பவும் கட்டாயமாக சிந்தித்துப் பார்ப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த யுக்தி உங்களுக்கு ஒரு முறை பயன் அடையவில்லை என்றாலும், அதை அப்படியே விட்டு விடக்கூடாது. திரும்பத் திரும்ப உங்கள் அணுகுமுறைகளை இந்த யுக்தியை பயன்படுத்தி வைத்துக் கொண்டே இருங்கள். உங்களது காரியம் வெற்றி அடைவது உறுதி.

நாம் சொல்வதை அடுத்தவர்கள் மறுக்காமல் கேட்பதற்கு இன்னும் ஒரு சுலபமான முறையும் உள்ளது. இது பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ஒரு முறை தான். அதாவது சொல்லுபவர்கள் உயரத்தில் இருக்க வேண்டும். கேட்பவர்கள் தாழ்வான இடத்தில் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக மேடையில் நின்று கொண்டிருப்பவர்கள் பேசும் பேச்சை கீழே அமர்ந்து இருப்பவர்கள் கேட்கின்றார்கள் அல்லவா? பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் இருக்கும் இடம் உயரமாக இருக்கும். மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடம் தாழ்வாக இருக்கும். மேலே இருந்து ஒருவர், ஒரு விஷயத்தை கூறும் போது, நம் காதுகளுக்கு வந்து சேரக்கூடிய தகவலின் ஈர்ப்பு விசையானது அதிகமாக

இருக்கும். இதனால் தான் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள். மேலிருந்து கீழே வரும் எந்த ஒரு செயல்பாட்டிற்க்கும் வேகமும், தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையும் கூட. அடுத்ததாக பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விவாதம்

செய்தாலும், கடன் தொகை விரைவில் கிடைக்க வேண்டும் என்றாலும், உங்கள் கைகளில் குபேர முத்திரையை வைத்துக்கொண்டு பேசுவது நல்ல பலனை தரும். உங்களது புதிய தொழில் வெற்றி அடைய வேண்டும் என்றாலும், தினம் ஒரு பத்து நிமிடம் குபேர முத்திரையை வைத்து சொந்த தொழில் நன்றாக முன்னேற வேண்டும் என்று தியானம் செய்வது நல்லது.
source-deiveekam

Leave A Reply

Your email address will not be published.