குழந்தை வாந்தி எடுக்கும் போது…. இதை மட்டும் எப்பவும் செய்யாதீங்க.. உயிருக்கே ஆபத்தாம்…!!

ஆரோக்கியம் மருத்துவம்
Advertisement

குழந்தைகளோ, பெரியவர்களோ அவர்கள் வாந்தி எடுக்க முயற்சிக்கும் போது பெற்றொர்கள் வாயை மூடினால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.பெற்றொர்கள் தங்கள் குழந்தைகள் வாந்தி எடுக்கும் போது மெத்தை வீணாகி விடுமோ, இல்லை வீடு அசிங்கமாகி விடுமோ என்று வாயை பொத்தி

குளியலறைக்கு கொண்டு செல்வர்.ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வாந்தி எடுக்கும் போது வாயை மூடினால், மூச்சி திணறல் ஏற்பட்டு உயிர் பிரியும் அபாயம்

உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வாந்தியானது நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சி விடும்பாதையை அடைத்து உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

எனவே குழந்தைகளுக்கு வாந்தி வந்தால் உடனே எடுக்க விடுங்கள். இடம், துணி, மெத்தை, இருக்கைகள் வீணாகிவிடும் என்பதற்காக வாயை பொத்தி வைக்கவேண்டாம்.

Advertisement