இலங்கையில் பாரிய மின்சார தடை..!!

இலங்கை செய்திகள்
Advertisement

எதிர்காலத்தில் நாடு இருண்ட படுகுழியில் விழும் அபாயம் இருப்பதாக இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் திட்டங்களை அதிகாரிகள் நிராகரித்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் நிலக்கரி மாபியா என்ற போலி கதையை உருவாக்கி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நாட்டில் கடுமையான மின்

நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று இலங்கை மின்சார சபையின் செயற்குழு உறுப்பினர் சரிம ஜயநாத் தெரிவித்துள்ளார்.சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு முகவர்களை பெறுவதற்கான எதிர்பார்ப்பினால் அதிகாரிகளுக்கும் நாட்டிற்கும் தவறான படம் உருவாக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement