ஏழு ஜென்ம பாவத்தை போக்கும் சக்தி வாய்ந்த 3 பரிகாரங்கள்!

ஆன்மீகம்
Advertisement

தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வினையாக வந்து நிற்கும். நீங்கள் சில சுலபமான பரிகாரங்களை செய்து உங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்கிறது ஐதீகம்.

நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று எந்நேரமும் யோசிப்பவரா நீங்கள் ? எதை செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே? எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது நம் கைகளில் நிற்கவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்? அதற்கு எல்லாம் முக்கிய காரணம் உங்கள் பூர்வ ஜென்மத்தில்

செய்த பாவங்கள் தான் என்கிறது புராணம். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வினையாக வந்து நிற்கும். இதுபோன்ற சூழலில் சிக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் சில சுலபமான பரிகாரங்களை செய்து உங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்கிறது ஐதீகம்.

முக்கியமாக பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு தேடி சென்று உணவளியுங்கள். , மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் தரும் உணவு உங்களின் பாவம் கணக்கை குறைத்துவிடும். வீட்டில் மிச்சமான உணவை தருவதைவிட நீங்கள் விருப்பப்பட்டு சமைத்து, அதை இல்லாதோருக்கு தரும்போது உங்களின் கர்மா நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் புறாக்களுக்கு உணவளிக்க மறக்காதீர்கள் . கோதுமை அல்லது ஏதேனும் தானிய வகையை நீங்கள் புறாக்களுக்கு கொடுப்பதன் மூலம் உங்களின் பூர்வ ஜென்ம சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisement

அதேபோல் அரிதிலும் அரிதாக ஏதேனும் இறந்து கிடக்கும் பாம்பை நீங்கள் காண முற்பட்டால் அதை குழி தோண்டி புதைத்து அதன் மேல் சிறிது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து விடுங்கள். இது அரிதிலும் அரிதாக நடக்கும் விஷயம் தான், இருந்தாலும் இதுபோன்ற செயல் உங்கள் கண்களில் பட்டால் அதை செய்வது நல்லது . அதேசமயம் அந்தப் பாம்பு இறந்து விட்டதா என்று பரிசோதித்துவிட்டு பிறகு இதை நீங்கள் செய்யலாம்.- source: maalaimalar

Advertisement