கொரோனா பரவல் தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை..! நாட்டை முடக்காவிட்டால் ஆபத்து..!

இலங்கை செய்திகள்
Advertisement

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.உடனடியாக நாட்டினை முடக்கி நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பரவல் நிலைமை குறித்து பொதுச் சகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், நாட்டின் நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாகவும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு நாட்டில் வைரஸ் தொற்று பரவியுள்ளதை மறுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement