இலங்கையில் மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இன்றில் இருந்து புதிய நடைமுறையில்..!!

Uncategorized இலங்கை செய்திகள்
Advertisement

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரடையும் நிலையில் மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மதுபான விற்பனை அனுமதியுடன் கூடிய உணவகங்களுக்கான சுகாதார வழிகாட்டி மதுவரி திணைக்களத்தினால் இன்று வெளியிட்ப்பட்டுள்ளது.

இதன்படி 10 வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும்.வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் கள்ளு அருந்தும் இடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு

நட்சத்திர ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்காக இரவு 10 மணி வரை மாத்திரம் திறக்க அனுமதி.ஹோட்டல் மதுபான நிலையங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.திரையரங்கு மதுபானசாலை மறுஅறிவித்தல் வரை பூட்டு.உணவகங்களுக்கான மதுபான நிலையம் மறுஅறிவித்தல் வரை பூட்டு.வாடிவீடு மதுபானசாலை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி.

களியாட்ட விடுதிகளுக்கான மதுபான நிலையம் மறுஅறிவித்தல் வரை பூட்டு.22A அனுமதிப் பத்திரம் உள்ள இடங்கள் உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க அனுமதி.22B அனுமதிப் பத்திரம் உள்ள இடங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

Advertisement