வீதியோரங்களில் உள்ள கடைகளில் பணியாற்றுவோருக்கு அன்டிஜென்ட் பரிசோதனை

இலங்கை செய்திகள்
Advertisement

மேல் மாகாணத்தில் வீதியோரங்களில் காணப்படும் சிறு கடைகளில் பணியாற்றி வருவோருக்கு எழுமாறான அடிப்படையில் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் நடைபாதை வியாரபாரம் மற்றும் சிறு கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவ்வாறான 275 பேர் கண்காணிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதில் 72 பேருக்கு என்டிஜன் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் கோவிட் தொற்றுக்கு இலக்கான எவரும் அடையாளம காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மாகாணம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement