யாழ் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு கொரோனா..!

இலங்கை செய்திகள்
Advertisement

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 38 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 12 முதல் இன்று வரை (04) 38 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அவ்வப்போது பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கொரோனா அபாயத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்களிடமும், தங்கள் கடமைகளைச் செய்வதிலும் கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement