உங்கள் ராசிப்படி அதிஷ்டத்தை அள்ளித்தரும் ராசிகல் மோதிரம்..!

ஜோதிடம்
Advertisement

நவரத்தினங்களான முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய கற்களில் ஒருவரின் ராசிப்படி எந்த நவரத்தின கற்களை அணிந்தால் அதிர்ஷ்டத்தை பெறலாம் என்று பார்க்கலாம்.


மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இவர்கள் இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.


ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இவர்கள் இதை அணிந்தால் மகிழ்ச்சி, யோகம், வசீகரம் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

Advertisement


மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இவர்கள் இதை அணிந்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் பெறலாம்.


கடகம்
கடகம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இவர்கள் இதை அணிந்தால், அவர்களின் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி கிடைப்பதுடன், செல்வ விருத்தி உண்டாகும்.


சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இவர்கள் இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலி ஆவார்கள்.

Advertisement


கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இவர்கள் இதை அணிந்தால் செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.


துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இவர்கள் இதை அணிந்தால் மகிழ்ச்சி, யோகம், வசீகரம் ஆகிய அனைத்தும் அவர்களின் வாழ்வில் உண்டாகும்.


விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இவர்கள் இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும், கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

Advertisement


தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது அவர்களுக்கு மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.


மகரம்
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். இவர்கள் இதை அணிந்தால், செல்வ விருத்தி, செல்வாக்கு, தெய்வீகத்தன்மை உண்டாகும்.


கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். இதை அணிந்தால், அவர்களுக்கு செல்வ விருத்தி, செல்வாக்கு, தெய்வீகத்தன்மை ஆகியவை உண்டாகும்.

Advertisement


மீனம்
மீனம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இவர்கள் இந்தக் கல்லை அணிந்தால், அவர்களுக்கு மன அமைதியும், செல்வ விருத்தியும் கிடைக்கும்

Advertisement